24.7 C
Jaffna
January 7, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் தமிழரசின் தலைவர் கலந்துகொண்ட கலந்துரையாடல்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் பா.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், கனகசபை, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உறுப்பினர்கள், வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், வாலிபர் முன்னணியினர், மற்றும் மகளிர் அணியினர், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான முன்நகர்வுகள், மாவட்ட ரீதியில் கட்சி எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமகால அரசியல் நிலைமைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் கட்சி ரீதியான செயற்பாடுகள் குறித்து தலைவர், பதில் பொதுச் செயலாளரினால் கருத்துக்கள் முன்வைக்ககப்பட்டதுடன் அங்கத்தவர்களின் கேள்விகளுக்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெற்றோலிய துறையை மேம்படுத்த அருண் முயற்சி

east tamil

கிண்ணியா சிறுவன் உலக சாதனை

east tamil

மணல் கடத்தியவர் கைது

Pagetamil

ரோட்டரி மாவட்ட ஆளுநர் திருகோணமலைக்கு விஜயம்

east tamil

சாய்ந்தமருதில் தற்கொலை

east tamil

Leave a Comment