நேற்று 249 தொற்றாளர்கள்!

Date:

நேற்று 249 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,088 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 237 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 87,466 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வந்த 12 நபர்களும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டன்.

2,904 பேர் தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைந்த 235 பேர் மருத்துவமனைகளில் இருந்து நேற்று வெளியேறினர், குணமடைநதவர்களின் எண்ணிக்கையை 88,623 ஆக உயர்ந்துள்ளது. தொற்று சந்தேகத்தில் 411 பேர் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...

மஹிந்த கூட்டத்தை புகழ்ந்து பாடிய பைத்தியத்தை தெளிய வைப்போம்

யாழ்ப்பாணத்தில்; இருந்து சென்ற ஒரு பைத்தியம் முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல வடக்கு கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்