எகிப்தின் சுயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட பிரம்மாண்ட ‘எவர் கிவன்’ கப்பல் மிதக்கும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டு, சரியான திசைக்கு திருப்பப்பட்டுள்ளது.
400 மீட்டர் நீளமுள்ள எவர் கிவன் மலேசியாவிலிருந்து நெதர்லாந்திற்கு செல்லும் வழியில் சிக்கிக்கொண்டது.
‘எவர் கிவன்’ சரக்குக் கப்பல் பனாமாவில் பதிவுசெய்யப்பட்ட இந்த கப்பல் ஜப்பானிய நிறுவனமான இமாபரி கப்பல் கட்டுமானத்திற்கு சொந்தமானது. தைவான் நாட்டைச் சேர்ந்த ‘எவர் கிரீன் மெரைன்’ என்ற நிறுவனம் இயக்கிவருகிறது. கடந்த வாரம் சுயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டது. இந்த நிலையில் ஒருவாரம் மேற்கொண்ட மீட்புப் பணியின் விளைவாக கப்பல் பாதி மீட்கப்பட்டுள்ளது.
🚨The Ever Given is floating🚨pic.twitter.com/GNzlzaom8q
— Evan Hill (@evanchill) March 29, 2021
இதனைத் தொடர்ந்து சுயஸ் கால்வாயில் கப்பல் மிதக்கத் தொடங்கியுள்ளது. இதனை எகிப்து அரசு உறுதிப்படுத்தியுள்ளது. கப்பலில் இருந்தவர்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து சூயஸ் கால்வாயின் இரு முனைகளில் நிற்கும் சரக்குக் கப்பல்கள் விரைவில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுயஸ் கால்வாய் கப்பல் போக்குவரத்தை ஒழுங்கமைக்கும் கண்காணிக்கும் அதிகாரசபையும் கப்பல் இப்போது ஓரளவு மிதந்து “சரியான திசையில்” திரும்பியுள்ளது என உறுதி செய்துள்ளது.
How it started
How its going
We can confirm, we have movement, the #EverGiven has been partially freed, still some work to do though. Stay tuned! #SuezLiveonMT #Suez pic.twitter.com/bbCCHaqrv6
— MarineTraffic (@MarineTraffic) March 29, 2021
Diverted fleet going around the Cape
The #EverGiven incident has led to many containerships changing course to avoid delays at the #Suez Canal.
MarineTraffic #AIS data shows the diverted containership fleet including some MSC, Maersk & CMA-CGM vessels until earlier this morning. pic.twitter.com/FLIAsewXh5— MarineTraffic (@MarineTraffic) March 29, 2021
கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு தளமான மேரி டிராஃபிக்.கொம், செயற்கைக்கோள் தரவு கப்பல் நகர்த்தப்பட்டிருப்பதைக் காட்டியது, ஆனால் “இன்னும் சில வேலைகள் உள்ளன.” என தெரிவித்துள்ளது.
BREAKING : EVER GIVEN ship has been UNSTUCK & Moving into #Suez Canal after 6 Days!!
Egyptian crew managed to float it moments ago. It’s 5:42 am there: pic.twitter.com/GoMlYjQerL
— Joyce Karam (@Joyce_Karam) March 29, 2021
கப்பல் சிக்கிக் கொண்டது எப்படி?
உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான ‘எவர் கீரின்’ கப்பல் 20 ஆயிரம் கண்டெய்னர்களைக் கொண்டு செல்லத்தக்கது.
400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் மலேசியாவிலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 23ஆம் திகதி சுயஸ் கால்வாயில் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதனால் அந்தக் கப்பல் கால்வாயின் குறுக்காகத் திரும்பி மணலில் சிக்கியது. மனிதப்பிழை காரணமாகவும் விபத்து நேர்ந்திருக்கலாமென, சுயஸ் கால்வாய் போக்குவரத்து அதிகாரசபை தலைவர் தெரிவித்திருந்தார்.
மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் எகிப்து நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையாக விளங்குகிறது. உலக வர்த்தகத்தின் 12 சதவீதம் இந்தக் கால்வாயின் வழியாக நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தக் கால்வாயின் குறுக்காக ‘எவர் கிவன்’ கப்பல் தரை தட்டியதால் அந்த வழியாக பிற கப்பல்கள் செல்ல முடியாத நிலை உருவானது. கிட்டத்தட்ட கால்வாயின் இருபுறம் 160 கப்பல்கள் செல்ல வழியின்றி நின்றன. இதனால் தினமும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்தன.