யாழ்ப்பாணம்தான் முதலிடம்!

Date:

இலங்கையில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் யாழ் மாவட்டத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்திலிருந்து நேற்று 88 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. எனினும், வடக்கு சுகாதார திணைக்களத்தின் நேற்றைய அறிவிப்பின்படி, 143 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கம்பஹா மாவட்டத்திலிருந்து 29 பேரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 26 பேரும், இரத்தினபுரியிருந்து 28 பேரும், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 20, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து 9 பேர், கண்டி, காலி, திருகோணமலை, மொனராகலை மாவட்டங்களிலிருந்து தலா 6 பேர், களுத்துறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து தலா 5 பேர், குருநாகல். கேகாலை, பதுளை, வவுனியா மாவட்டங்களிலிருந்து தலா 4 பேர், அம்பாறை, புத்தளம் மாவட்டத்திலிருந்து தலா 3 பேர், மாத்தறை மாவட்டத்திலிருந்து 2 பேர், மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 18 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று நாடடில் 278 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எணணிக்கை 91,839 ஆக உயர்ந்துள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

11 கொலைகள் செய்த பாதாள உலக துப்பாக்கிதாரிக்கு தமிழ் பெயரில் போலி அடையாள அட்டை: வசமாக சிக்கிய விதானையார்!

தலங்கம, அகுரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் சட்டத்தரணி மற்றும்...

சுரேஷ் சாலேவை பரிசோதித்த 10 மருத்துவர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான...

டிக்கோயா இரட்டைக் கொலை: தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது!

டிக்கோயா நகரில் இடம்பெற்ற வயோதிப தம்பதியின் இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்