UPDATE: பல்லச்சுட்டியில் பரபரப்பு சம்பவம்: குடும்ப விவகாரம் முற்றி மோதல் (PHOTOS)

Date:

யாழில் குடும்ப விவகாரத்தில் இருவர் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரின் தலையில் 28 தையல்கள் போடப்பட்டுள்ளது. இன்னொருவரின் கை, கால்கள் முறிந்துள்ளன.

இளவாலை, பல்லச்சுட்டி பகுதியில் நேற்று முன்தினம் (25)  இந்த சம்பவம் நடந்தது.

அந்த பகுதியிலுள்ள குடும்பமொன்று பிரிந்து வாழ்கிறது. அவர்களின் ஒரே பிள்ளை தாயாரின் பராமரிப்பில் இருந்து வருகிறது.

குடும்ப விவகாரமொன்றினால் ஆலயத்தில், பிரிந்து வாழும் கணவன் தரப்பினருக்கும், மனைவியின் சகோதரனிற்குமிடையில் முறுகல் ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது. குழந்தையின் தந்தையினால், மனைவியின் சகோதரன் தாக்கப்பட்டுள்ளார். அவரை பழிவாங்குவதாக குறிப்பிட்டுவிட்டு, மனைவியின் சகோதரன் அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்னர், தாக்கப்பட்டவர் வேறு சிலருடன் , தாக்கியவர்கள் தரப்பின் வீட்டிற்கு சென்றார்.

அங்கு முரண்பாடு ஏற்பட்டது. சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் அங்கு சென்றனர். ஆட்கள் வருவதை அவதானித்த, வீட்டுக்கு வெளியில் நின்றவர்கள் தப்பியோடினர். இருவர் மோட்டார் சைக்கிள்களை திருப்ப முயன்ற போது விழ, அவர்கள் மோட்டார் சைக்கிள்களை போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

வீட்டுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த இருவரையும் கிராம மக்கள் வளைத்துப் பிடித்தனர்.

தப்பியோடியவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர்.

பின்னர் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தாக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பினர்.

spot_imgspot_img

More like this
Related

டொரொண்டோ பேருந்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு: தமிழ் இளைஞர் கைது

கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும்...

போலி வைத்தியர் கைது!

மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்