யாழில் குடும்ப விவகாரத்தில் இருவர் பிடிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரின் தலையில் 28 தையல்கள் போடப்பட்டுள்ளது. இன்னொருவரின் கை, கால்கள் முறிந்துள்ளன.
இளவாலை, பல்லச்சுட்டி பகுதியில் நேற்று முன்தினம் (25) இந்த சம்பவம் நடந்தது.
அந்த பகுதியிலுள்ள குடும்பமொன்று பிரிந்து வாழ்கிறது. அவர்களின் ஒரே பிள்ளை தாயாரின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
குடும்ப விவகாரமொன்றினால் ஆலயத்தில், பிரிந்து வாழும் கணவன் தரப்பினருக்கும், மனைவியின் சகோதரனிற்குமிடையில் முறுகல் ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது. குழந்தையின் தந்தையினால், மனைவியின் சகோதரன் தாக்கப்பட்டுள்ளார். அவரை பழிவாங்குவதாக குறிப்பிட்டுவிட்டு, மனைவியின் சகோதரன் அங்கிருந்து சென்றுள்ளார்.
பின்னர், தாக்கப்பட்டவர் வேறு சிலருடன் , தாக்கியவர்கள் தரப்பின் வீட்டிற்கு சென்றார்.
அங்கு முரண்பாடு ஏற்பட்டது. சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் அங்கு சென்றனர். ஆட்கள் வருவதை அவதானித்த, வீட்டுக்கு வெளியில் நின்றவர்கள் தப்பியோடினர். இருவர் மோட்டார் சைக்கிள்களை திருப்ப முயன்ற போது விழ, அவர்கள் மோட்டார் சைக்கிள்களை போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.
தப்பியோடியவர்கள் விட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர்.
பின்னர் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தாக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பினர்.