பாடாசலை வாகனம் ஒன்றின் கதவு திடீரென திறந்து கொண்டதால், வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த 5 வயது பாலர் பாடசாலை மாணவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளான்.
வெல்லவாய, எல்ல வீதியின் ஹுனுகெட்டிய பகுதியில் இந்த விபத்து இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலர் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 5 வயதான அனுஹஸ் எனும் மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் வாகனத்தின் ஓட்டுனர் வெல்லவாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1