சுயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பெரும் சரக்குக் கப்பலை நகர்த்துவதற்கான முயற்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளன.
உலகின் ஆகிய முக்கிய நீர்வழிப் பாதையாக கருதப்படும் சுயஸ் கால்வாயைக் கடக்க கிட்டத்தட்ட 185 கப்பல்கள் காத்திருந்ததாக புளூம்பர்க் நிறுவனம் தெரிவித்தது. இந்த வழியாக மத்திய கிழக்கிலிருந்து கச்சா எண்ணை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. உலக வர்த்தகத்தில் சுமார் 12 வீதம் இந்தக் கால்வாயின் வழியாக நடைபெறுகின்றன.
கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலக தளவாட கட்டமைப்பில் இந்தப் புதிய சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.




