கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முன்வாருங்கள்!

Date:

சட்டவிரோத மது மற்றும் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த முன்வர வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் பெண் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் பெண் பிரதிநிதிகள் கிளிநொச்சியில் உள்ள தனியார் விடுதியில் மேற்கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு முன்வைத்த கோரிக்கைகள் வருமாறு-

கிளிநொச்சி மாவட்டம் கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக யுத்தினால் பாதிக்கப்பட்டு
தற்போது மீண்டு வருகின்ற நிலையில் பொருளாதாரத்திலும் கல்வியிலும் மீண்டும்
பின்னடைவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானம் போதைப்பொருள் உற்பத்தி
மற்றும் பாவனை பல குடும்பங்களை சீர்குலைத்து வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் குடும்ப வன்முறைகள், பிள்ளைகளின் கல்வி நிலை பாதிப்பு,
சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர் மற்றும் பெண்கள் உளவியல் ரீதியான பாதிப்பு,
கொலைகள் தற்கொலைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆகியன அதிகரித்து
வருகின்றன.

ஆகவே நாம் சமூக பொறுப்புள்ள பெண் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில்
இவற்றில் கவனம் செலுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

கிளிநொச்சியில் அன்மையில் இடம்பெற்ற கொலைகள் சிறுவர் கொலைகள்
அனைத்தும் சட்டவிரோத மதுவே காரணம்.

எனவே, கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மது உற்பத்தியை தடை செய்ய அனைத்து
தரப்பும் முன்வர வேண்டும், சட்டவிரோத மது போதைப்பொருள் உற்பத்தியாளர்கள்
மற்றும் விற்பனையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க போலீசார், மது ஒழிப்பு திணைக்களம் மற்றும் நீதித்துறை முன்வர வேண்டும்,

வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை சட்டவிரோத செயற்பாடுகளுக்கு
மூலகாரணமாக அமைந்திருக்கின்றது. ஆகவே வேலைவாய்ப்பையும் வாழ்வாதார
உதவிதிட்டங்களை மக்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும்,

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மாவட்ட
சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவினூடாக கண்காணித்து கல்வி
செயற்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும்,

கிளிநொச்சி மாவட்டமானது அதிகமானோர் விவசாயம் தன்னாதிக்கம்
கொண்டவர்கள் அதேபோன்று பனை தென்னை வளங்களை கொண்டுள்ள
பிரதேசமாகும் ஆகவே நலிவுற்றிருக்கும் எமது உள்ளுர், மதுபான உற்பத்தியை
அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும்; உயர்த்த அரசு
மற்றும் மாகாண திணைக்களங்கள் பனைதென்னை அபிவிருத்திச்சங்கங்கள்
முன்வரவேண்டும ;. என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

,இக்க்கோரிக்கைகளை ஐனாதிபதி, பாராளுமன்ற ;ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுனர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மற்றும் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி நிற்கின்றோம் என
கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் பெண் பிரதிநிதிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்