25.1 C
Jaffna
January 19, 2025
Pagetamil
உலகம்

மியான்மரில் சிறுமி கொல்லப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு!

மியன்­மா­ரில் ஆர்ப்­பாட்­டம் செய்­த­தற்­காக தடுத்து வைக்­கப்­பட்ட 600 பேரை இராணுவ ஆட்­சி­யா­ளர்­கள் நேற்று விடு­தலை செய்­த­தாக மூத்த சிறைத்­துறை அதி­காரி ஒரு­வர் ஏஎஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் தெரிவித்துள்ளார்.

“இன்­செய்ன் சிறைச்­சா­லை­யில் இருந்து புதன்­கி­ழமை 360 ஆண்களையும், 268 பெண்­க­ளை­யும் விடு­தலை செய்­து­விட்­டோம்“ என்று சிறை அலு­வ­ல­கத்­தில் இருந்து அவர் கூறி­ய­தாக ஏஎ­ஃப்பி குறிப்­பிட்­டது. இருப்­பி­னும் அந்த அதி­காரி யார் என்ற விவ­ரம் வெளியிடப்படட­வில்லை.

இதற்­கி­டையே, இராணுவ ஆட்­சிக்கு எதி­ரான போராட்­டத்­தைத் தொடர மக்­கள் முடிவு செய்­துள்­ள­னர். ஏழு வய­துப் பெண் குழந்தை துப்­பாக்­கி­யால் சுட்டுக் கொல்லப்பட்டது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்­கள் வீடுகளில் இருந்­த­வா­றும் வர்த்­தக நிறு­வ­னங்­களின் கத­வு­களை மூடியும் அமைதி வழிப் போராட்டத்தை தொடர முடிவு செய்திருப்பதாகவும் ஏஎ­ஃப்பி தெரிவித்துள்ளது.

மாண்­டலே நக­ரில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை வீடு வீடா­கத் தேடிச் சென்ற பாது­காப்­புப் படை­யி­னர் ஒரு வீட்­டின் கதவை எட்டி உதைத்து துப்­பாக்­கி­யால் கண்­மூ­டித்­த­ன­மா­கச் சுட்­ட­னர். அந்த வீட்­டுக்­குள் தமது தந்­தை­யின் மடி­யில் அமர்ந்­தி­ருந்த சிறுமி துப்­பாக்­கித் தோட்­டா­வுக்­குப் பலி­யா­னார். பின்­னர் அவ­ரது தந்தை மீதும் அவர்­கள் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தாக அவ­ரது மூத்த மகள் கூறி­ய­தாக ரொய்ட்­டர்ஸ் செய்தி தெரி­வித்­தது.

பெப்­ர­வரி 1ஆம் திகதி இராணு­வம் ஆட்­சிக்­க­விழ்ப்பை நடத்­திய பின்னர் அங்கு கொல்­லப்­பட்டுள்ள ஆகக் குறைந்த வய­து­டை­ய­வர் இச்­சி­று­மி­தான். இந்­தக் கொடூ­ரச் செய­லுக்கு உலக அள­வி­லான கண்டனங்கள் வலுத்து வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

காஸா எல்லையில் இன்று போர் நிறுத்தம்

east tamil

படகு கவிழ்ந்து 40 பாகிஸ்தானியர்கள் பலி

east tamil

Leave a Comment