நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு கொரோனா!

Date:

பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு கோவிட்-19 தொற்று உறுதியானது. இந்தத் தகவலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் கார்த்திக், தான் குணமாகப் பிரார்த்தனை செய்யுமாறு தன் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் விரைவில் நலம் பெற வேண்டிப் பலரும் அவருக்குப் பின்னூட்டத்தில் வாழ்த்தி வருகின்றனர்.

கார்த்திக் ஆர்யன் ‘பூல் புலைய்யா 2’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டார். இதில் கியாரா அத்வானி, தபு ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தபுவைக் கிண்டல் செய்து அண்மையில் கார்த்திக் ஆர்யன் பதிவிட்டிருந்தார். மேலும், பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ராவுக்காக லேக்மீ ஃபேஷன் வீக் நிகழ்ச்சியிலும் கார்த்திக் ஆர்யன் கலந்துகொண்டார்.

இதுதவிர ஓடிடியில் வெளியாகவுள்ள ‘தமாகா’ திரைப்படத்திலும் கார்த்திக் ஆர்யன் தொலைக்காட்சி வர்ணனையாளராக நடிக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களில் ரன்பீர் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி, சித்தாந்த் சதுர்வேதி, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்