தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிப்பதால் இலங்கை மீனவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இதனால் இரு தரப்பிற்குமிடையில் மோதல் சம்பவங்களும் நடப்பதுண்டு.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை இலங்கை கடற்படை அடிக்கடி தடுக்கும். அப்போதெல்லாம், இலங்கை கடற்படை தாக்கிவிட்டதாக தமிழக மீனவர்கள் கூறுவார்கள்.
இப்போது புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார்கள்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தம்மை தாக்கி விட்டதாக கூறுகிறார்கள்.
நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நடுக்கடலில் 15 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் வந்து, 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அபகரித்து சென்றதாகவும் புகார் தெரிவித்தனர். தாக்கப்பட்ட மீனவர்கள் நாகை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.