பி 2 பி பேரணி: பருத்தித்துறை நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!

Date:

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி தொடர்பாக பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கக்கூடாதென தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பருத்தித்துறை நீதிமன்றில் இன்று (22) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்காளிகள் சார்பில்  பிரதி மன்றாடியார் அதிபதி மாதினி விக்னேஸ்வரன்,  ருவான் குணசேகர, மாதவ தென்னக்கோன் முன்னிலையாகினர்.

பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன், வி.திருக்குமரன், கே.சயந்தன் உட்பட 11 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை, வல்வெட்டித்துறை பொலிசாரும் தாக்கல் செய்ய வழக்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாதென நாம் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிரதி மன்றாடியார் அதிபதி பொலிஸ் திணைக்களம் சார்பில் ஆஜராகினார்.

பிரதி மன்றாடியார் அதிபதி இன்று பூர்வாங்க ஆட்சேபணையை எழுப்பியிருந்தார். இந்த வழக்கை தாக்கல் செய்த எவரும் சந்தேகநபர்களாக பெயரிடப்படவில்லை. இதனால் வழக்கை தாக்கல் செய்ய தகைமை அவர்கள் கொண்டிருக்கவில்லை. பொலிசார் பி அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்துள்ளனர். ஆகவே, இந்த விசாரணைகளை தொடரக் கூடாது என நாம் கோர முடியாதென ஆட்சேபணை எழுப்பினார்.

சந்தேகநபர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கா விட்டாலும், அவர்கள் நீதிமன்ற அவமதிப்பை புரிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததால், அவர்கள் வழக்கீட்டு தகைமையை கொண்டிருப்பதாக குறிப்பிட்டோம்.

ஒரு புலன் விசாரணையை ஆரம்பிக்க சில அடிப்படை சட்டத் தேவைகள் உள்ளன. அந்த சட்டத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்க முடியாதென்பதை கடந்த தவணையை போல இம்முறையும் சமர்ப்பணம் செய்தோம்.

அரச தரப்பின் பூர்வீக ஆட்சேபணை தொடர்ந்து, எழுத்து மூல ஆட்சேபணை வழங்க அரச தரப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இரு தரப்பும் எழுத்துபூர்வ சமர்ப்பணங்களை வழங்க 4 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இந்த பூர்வாங்க ஆட்சேபணை தொடர்பாக  மே மாதம் 03ம் திகதி நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பிக்கும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்