பசறை விபத்து: தப்பியோடிய டிப்பர் சாரதி கைது!

Date:

பசறையில் நேற்று இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தை தொடர்ந்து, அந்த இடத்திலிருந்து தப்பியோடிய 45 வயதான சந்தேகநபர் நேற்று மாலை பசறை பொலிசாரால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த நேரத்தில் மதுபோதையில்  என்பதை தீர்மானிக்க பேருந்து சாரதியின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் இன்று நீதித்துறை மருத்துவ அதிகாரியால் பெறப்படும் என்று பொலிசார் தெரிவித்தனர்.

பசறை 13வது மைல் கல், மெத்தக்கடை பகுதியில் நேற்று நடந்த விபத்தில் உயிரிழந்த 14 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீதிவான் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் சடலங்கள் உளவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் காயமடைந்த 31 நபர்களிடமிருந்து அறிக்கைகள் பதிவு செய்யப்படும் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

20 ஆண்டுகளின் பின் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப்படை!

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் புதன்கிழமைக்குள் வெளியேறத்...

‘நான் வெறும் டம்மிப்பீஸ்’: யாழ் நீதிமன்ற வழக்கில் கோட்டா சொன்ன தகவல்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய ஏறக்குறைய பத்து ஆண்டுகாலப் பகுதியில், எந்தவொரு...

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்