காதல் யாருக்கு எப்போது ஏற்படும் என்பது தெரியாது. இருப்பினும் ஜோதிடத்தில் எந்த ராசியினர் காதலில் விழ வாய்ப்புள்ளது என்பதை கணித்துள்ளனர். சில ராசிகளும், சில கிரக அமைப்புகளும், காதலுக்கு முக்கிய அங்கமாக இருக்கின்றன.
இங்கு எந்தெந்த ராசியினர் காதலில் விழ வாய்ப்புண்டு, எந்த ராசியினருடன் காதல் வர வாய்ப்புள்ளது என்பதைப் பார்ப்போம்.
காதலுக்கான ராசிகள்:
சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷபம், துலாம்
சந்திரனை அதிபதியாக கொண்ட கடகம்
சூரியனை அதிபதியாக கொண்ட சிம்மம்
குருவை அதிபதியாக கொண்ட மீனம் –
இந்த ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்று இருப்பதால் காதல் கைகூட வாய்ப்புள்ளது.
சூரியன் ஆட்சி பெறுவதாலும், ராசிக்கு 5ஆம் இடம் பலம் பெற்று இருந்தாலும் காதல் வெற்றி அடையும்.
7ஆம் இடம் வலிமையாக அதாவது மனைவி ஸ்தானம் வலுவாக இருக்க காதல் கை கூடும். துலாம் அதிபதி சுக்கிரன் அந்த ராசியிலேயே அமர்ந்து மற்ற ராசிகளுக்கு கை கொடுப்பதாக இருந்தால் அந்த நிலை காதல் சேர வாய்ப்புள்ளது.
யாருடன் காதல் ஏற்படும்?
ஒருவருக்கு அவரின் ராசியிலிருந்து 5 அல்லது 9ஆம் இடத்தில் உள்ள ராசியினர் மீது பெரும்பாலும் காதல் ஏற்படும்.
அதே சமயம் உங்கள் ராசிக்கு 3,4ஆம் இடத்தில் உள்ள ராசி அல்லது 7,11ஆம் உள்ள ராசியினரிடம் அதிக நட்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது..
பெரும்பாலும் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் உள்ள ராசியினர் மீது அதிக காதல் ஏற்பட வாய்ப்புண்டு.