வடக்கு காணி ஆவணங்கள் மீள கொண்டு வரப்பட்டமைக்கு தானே காரணமென அடித்து விட்டுள்ளார் அங்கஜன் இராமநாதன்.
தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனங்களின் இருப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அந்த இனங்களால் குற்றம்சாட்டப்படும் அரசின் பங்காளரான அங்கஜன் இராமநாதன், சிறுபான்மையினர் மீதான எந்த நெருக்கடிக்கு எதிராகவும் இதுவரை குரல் கொடுத்ததில்லை.
மாறாக, அரசின் பங்காளியாக இருந்தாலும், டக்ளஸ் தேவானந்தா பல விடயங்களில் பகிரங்கமாக குரல் கொடுத்து வருகிறார்.
வடக்கு காணி ஆவணங்களை மீள கொண்டு வர வைப்பதில் தானே செயற்பட்டதாக, நேற்று (19) வட்டுக்கோட்டையில் நடந்த நிகழ்வில் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள் பகிரங்கமாகவும், தனிப்பட்ட முறையிலும் செயற்பட்டமை, தமிழ் மக்களின் பகிரங்க எதிர்ப்பு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலையிட்டமை என பல காரணங்களினால் ஆவணங்களை மீள வடக்கிற்கு அனுப்ப எடுத்த முடிவை, “அமைச்சர் மஹிந்தானந்தவின் அரசியல் ஸ்டன்ட்“ மூலம் செயற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், காணி ஆவண விவகாரத்தில் உறக்கத்தில் இருந்த அங்கஜன், ஆவணம் மீள கொண்டு வரப்பட்டதும் உரிமை கோரியுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தல் சமயத்தில், நிதி ஒதுக்கப்படாத வீதிகளில் கூட புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி அடிக்கல் நாட்டியதாக அங்கஜன் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீட்டில் கண்ணை மூடிக்கொண்டு அடித்து விட்டதில் “மயங்கிய“ இளைஞர்கள், இப்பொழுதும் எதுவும் நடக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதேவிதமாகவே, காணி ஆவண விடயத்திலும் அடித்து விட்டுள்ளார்.