நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்த கருத்திற்கு எதிராக அரச புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்து சிஐடி குழு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
நலின் பண்டார தெரிவித்த 4 கருத்துக்களிற்கு எதிராக சுரேஷ் சாலே முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயும் மலேசியாவில் 2019 இல் சந்தித்ததாக நலின். பண்டார தெரிவித்துள்ளார்,
அவர் மலேசியா, இந்தோனேசியா மற்றும் இந்தியாவுக்கு சஹ்ரான் ஹாஷிம் செல்ல வசதி செய்துள்ளார்,
பயிற்சியினைப் பெற்ற பின்னர் அவர் இந்தியாவில் இருந்து நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். மேலும் ஜஹ்ரான் ஹாஷிமின் பல நடவடிக்கைகள் குறித்து சுரேஷ் சாலே அறிந்திருந்தாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் அவர் வரவழைக்கப்படவில்லை.
நலின் பண்டார கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே நிராகரித்ததாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
சுரேஷ் சாலேயின் முறைப்பாட்டின் மூலம் தான் சஹ்ரான் ஹாஷிமுடன் சந்திக்கவில்லை என்றும் அவர் மூன்று முறை விசாரணை ஆணையக்குழுவின் முன் ஆஜரானார் என்றும் தெரிவித்துள்ளார்.
நலின் பண்டாரவின் அறிக்கை சமூகங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது என்றும், உளவுத்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.