மஹியங்கனை அருகே பகலில் நிம்மதியாக தூங்கும் காட்டு யானைகளின் அரிய காட்சி ட்ரோன் கமராவால் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
அத தெரணவில் பகிரப்பட்ட இந்த காணொளியில், இரவு முழுவதும் உணவு தேடிய பிறகு யானைகள் தரையில் ஓய்வெடுப்பதைக் காட்டுகிறது.
மஹியங்கனை நகரத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றங்கரையோரப் பகுதியில் நேற்று (10) மாலை இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டன.




