ஒரு அரிய வகை சிறுத்தையை கல்லெறிந்து கொலை செய்த இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க மாத்தளை நீதிவான் சாமர விக்ரமநாயக்க நேற்று முன்தினம் (17) உத்தரவிட்டார்.
ரத்தோட்டை, நிக்கோயவத்தை, சிங்கமலை பகுதியில் உள்ள காட்டில் சிறுத்தை வலையில் சிக்கியிருந்தது. அது, கல்லெறிந்து கொல்லப்பட்டதை பெண் ஒருவர் வீடியோ எடுத்திருந்தார்.
1992 தொலைபேசி எண்ணிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், சந்தேகநபர்களின் வீட்டிலிருந்து சிறுத்தையின் உடற்பாகங்கள் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டன.
சிறுத்தையை கல்லை கல்லெறிந்து கொன்ற போது வீடியோ எடுத்த பெண்ணின் மொபைல் போனும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டது.
பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் மற்றும் மேலதிக விசாரணை அறிக்கைகளை 2021 மே 20 க்குள் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.