அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி தடையை 4 ஐரோப்பிய நாடுகள் நீக்கின!

Date:

அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பு மருந்துக்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடையை பிரான்ஸ் உள்ளிட்ட 4 ஐரோப்பிய நாடுகளில் நீக்கியுள்ளன.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியது. இந்த மருந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பு மருந்தால் இரத்த உறைவு ஏற்படுவதாக புகார் எழுந்தன. இதனால் அந்த தடுப்பு மருந்தை பல்வேறு ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த தடுப்பூசியை மீண்டும் மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.

ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளில் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது தெளிவாகியிருப்பதால், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்