யாழ் நகரில் ரிக்ரொக் காதலியுடன் மல்லுக்கட்டிய காதலன்!

Date:

காதலியின் ரிக்ரொக பதிவுகள் பிடிக்காமல் கண்டித்ததால், அவர் ரிக்ரொக்கிலேயே ஒரு காதலனை பிடித்து விட்டதாக கூறி, யுவதியுடன் இளைஞன் ஒருவர் மல்லுக்கட்டிய சுவாரஸ்ய சம்வம் இடம்பெற்றது.

யாழ் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நேற்று (16) மாலை இந்த சம்பவம் நடந்தது.

நேற்று மாலை இரண்டு யுவதிகள் பல்பொருள் அங்காடிக்கு வந்து பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு இளைஞர்கள் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்தனர். அதில் ஒரு இளைஞன், பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த யுவதியுடன் தகராற்றில் ஈடுபட்டார்.

இருவரும் உரத்த குரலில் முரண்பட, பல்பொருள் அங்காடி, பாதுகாப்பு ஊழியர்கள் தலையிட்டு நிலைமையை சுமுகமாக்க முயன்றனர்.

முரண்பட்ட இளைஞன், அந்த யுவதியை தொலைபேசியில் வீடியோ படம் பிடிக்க முயல, அவர் கைத்தொலைபேசியை தட்டிவிட, நிலத்தில் விழுந்த தொலைபேசி உடைந்தது. கோபமடைந்த இளைஞன், யுவதியை தாக்க முயன்றபோது, அங்கிருந்த ஊழியர்களால் அவர் வெளியேற்றப்பட்டார்.

தான் அந்த யுவதியை சில வருடங்களாக காதலித்ததாகவும், அண்மைய வருடங்களில் அவர் ரிக்ரொக் வீடியோக்களை வெளியிட்டு, அதன் மூலம் வேறொரு காதலை ஏற்படுத்தி, தன்னை தவிர்த்து வருவதாகவும் இளைஞன் குற்றம்சாட்டினார்.

யுவதி சில தினங்களின் முன்னரும் ரிக்ரொக் வீடியோ வெளியிட்டதாகவும், அதையெல்லாம் எப்படி சகித்துக கொள்வதென்றும் சச்சரவில் ஈடுபட்டார்.

பங்பொருள் அங்காடிக்கு வெளியே இளைஞர்களை அனுப்பிய பின்னரும், முன்னாள் காதலன் முறுகிக் கொண்டு நின்றார். அங்காடியினர், பொலிசாரை அழைக்க முயன்றபோது, இளைஞர்கள் அங்கிருந்து நழுவிச் சென்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எட்டயபுரம் அருகே இலங்கைத் தமிழர்கள் – கிராம மக்கள் இடையே மோதல்

எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாள்​பட்​டி​யில் கிராம மக்​களுக்​கும், இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமைச்...

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

ஈரானின் இராணுவம் சனிக்கிழமையன்று ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக அறிவித்தது. இதைத்...

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்