1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை இலங்கை அணி வெற்றி கொண்டு, இன்று 25 ஆண்டுகள் நிறைவடைகிறது.
லாகூரில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி தலைவர் அர்ஜுன ரணதுங்க களத்தடுப்பை தெரிவு செய்தார்.
கப்டன் மார்க் டெய்லர் மற்றும் ரிக்கி பொண்டிங்கின் அற்புதமான தொடக்கத்திற்குப் பிறகு, அவுஸ்திரேலியா 137/1 என்ற நிலையிலிருந்து 170/5 ஆக சரிந்தது, இலங்கையின் சுழல் படையின் இடைவிடாத தாக்குதலில் அவுஸ்திரேலியா திண்டாடியது.
50 ஓவர்களில் அவுஸ்திரேலியா 241/7 என முடித்தது.
இலங்கை விரட்டிய இலங்கை, 30 ஓட்டங்களிற்குள் இரண்டு தொடக்க வீரர்களையும் இழந்து, இக்கட்டான நிலைமைக்கு உள்ளாகியது. எனினும், அரவிந்த டி சில்வாவின் அபார சதம், குருசிங்க, அர்ஜூனவின் ஆட்டத்தின மூலம் வெற்றியிலக்கை அடைந்தது.
அரவிந்த டி சில்வா ஆட்ட நாயகன், சனத் ஜெயசூரிய தொடர் நாயகன்.
1996 உலகக் கோப்பை தொடரில் இலங்கையின் முதல் போட்டி அவுஸ்திரேலியாவுக்கு எதிரானது. இலங்கையில் விளையாடுவதிலுள்ள பாதுகாப்பு கவலைகளை மேற்கோளிட்டு அவுஸ்திரேலியா இலங்கை வந்து விளையாடவில்லை. இதனால் இலங்கைக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.
சிம்பாப்வேவுக்கு எதிரான அடுத்த போட்டியில், இலங்கை எளிதான வெற்றியை பெற்றது. அடுத்த போட்டி மேற்கிந்தியத் தீவுகளுடன். அவர்களும் பாதுகாப்பு காரணத்தை காட்டி இலங்கையில் வந்து விளையாடவில்லை.
கென்யாவுடனான ஆட்டத்தில் இலங்கை இரக்கமில்லாமல் ஆடி, 398/5 என்ற ஸ்கோரை பெற்றது.
காலிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
பரபரப்பான அரையிறுதியில் கொல்கத்தாவில் இந்தியாவை வீழ்த்தியது.
கத்துக்குடி அணியாக கிரிக்கெட்டில் காலடியெடுத்து வைத்த இலங்கை, மூத்த அணியாக உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது. 25 ஆண்டுகளின் முடிவில் இலங்கை மீண்டும் கத்துக்குட்டி அணியாக மாறியிருப்பது பெரும் துயரமே.