வலிமை அப்டேட்: படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு

Date:

அஜித் பிறந்த நாளன்ற வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்தது.

தற்போது அந்தக் காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இறுதியாக, சண்டைக் காட்சி ஒன்றை வெளிநாட்டில் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. இதற்காக ஏப்ரலில் வெளிநாடு செல்வார்கள் எனத் தெரிகிறது.

வலிமை படத்தில் யாரெல்லாம் அஜித்துடன் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்களோ வலிமை அப்டேட்டுக்காக பல்வேறு வழிகளில் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், படக்குழுவினரோ எதற்கும் அசரவில்லை.

தற்போது முதன்முறையாக வலிமை அப்டேட் குறித்த தகவலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. மே 1ஆம் திகதி அஜித் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். அன்றைய தினத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

வலிமை படக்குழுவினரின் இந்த அறிவிப்பு, அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்