26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

எமது நிலைப்பாட்டையே ஐ.நாவில் இந்தியா பிரதிபலித்துள்ளது: டக்ளஸ்!

கிளிநொச்சி பிறம்மந்தனாறு கிராமத்தில் சமுர்த்தி உற்பத்தி கிராமத் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று(16) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

அந்நிகழ்வில் பிரதம அதிதியாக்க் கலந்து கொண்டு உரையாற்றியபோது தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வானது இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து ஆரம்பிப்பதனூடாகவே சாத்தியப்படுத்த முடியும் என்பதே கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

எமது நிலைப்பாட்டையே ஐக்கிய நாடுகள் எனும் சர்வதேச தளத்தில் இந்தியாவும் இன்று வெளிப்படுத்தியுள்ளது.

எமது அரசியல் நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் இந்தியாவின் இலங்கைத் தமிழரின் அரசியல் தீர்வு தொடர்பான வலுவான நிலைப்பாடாக இருப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன், அதை வரவேற்கின்றோம் என்றார்.

உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சந்தைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கும், உற்பத்திசார் முயற்சிகளை மேலும் ஊக்குவிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்றவகையிலும் அர்த்தபூர்வமான முயற்சிகளை முன்னெடுப்பேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரச வேலைவாய்ப்புகள் என்ற போர்வையில் தகவல் திருட்டு

east tamil

இன்று முதல் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு

east tamil

இலங்கையில் விரைவில் சூரிய மின்னுற்பத்தி

east tamil

கம்மன்பிலவின் கவலைகளின் பின்னணி என்ன?

Pagetamil

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

Leave a Comment