போரதீவு பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் ஆற்றுமண் ஏற்றுவதற்கு மூன்று மாதம் தடை செய்வதற்கான தீர்மானம் போரதீவுப் பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள மண் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளருக்கு பணிக்கப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான அபிவிருத்திக் குழு கூட்டமானது பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகியின் ஏற்பாட்டில் பிரதேச அபிவிருத்திக்கு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சா.வியாளேந்திரன் தலைமையில் உப தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன், ப.சந்திரகுமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள். சங்கங்கள் அமைப்புக்களின் பிரதி நிதிகளின் பங்கு பற்றதலுடன் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
இதன் பேது கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம்,நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்திä, விவசாயம் போன்ற துறைகளின் அபிவிருத்திகள் தொடர்பாகவும், மேற்படி துறைகள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களின் போக்ககள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
அந்தத பிரதேசகத்தில் கூடுதலான மண்ணகழ்வு இடம் பெற்று வருவதாகவும், இதனால் விவசாயத் துறை பாதிப்படைந்து வருவதாகவும், வீதிகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும் பொது மக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரன் மற்றும் இரா சாணக்கியன் ஆகியோரினால் முன்வைக்கப்பட்டது.
இதனை செவிமடுத்த அபிவிருத்திக் குழுவின் தலைவர், மேற்படி காரணங்களை கருத்திற் கொண்டு மூன்று மாதங்கள்ளிற்கு மண்ணகழ்வினை நிறுத்தி வைப்பபதற்கான தீர்மானத்தினை நிறை வேற்றியதுடன் அதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பிரதேச செயலாளரை கேட்டுக் கொண்டார்