29.5 C
Jaffna
March 28, 2024
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அழைப்பு விடுக்க தயாராகிறது இலங்கை!

ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட்டை இலங்கைக்கு அழைப்பது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில், இலங்கை தொடர்பாக பச்லெட் அம்மையார் சமர்ப்பித்த கறாரான அறிக்கையையை தொடர்ந்து, இந்த விஷயம் அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு வரும்படி அழைப்பிதழ் வழங்குவதை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் நாட்டிற்கு வருவதன் மூலம், உண்மையான களநிலவரத்தை அறிந்து கொள்ளலாமென அரசாங்கம் நம்புகிறது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே, இந்த விவகாரம் பரிசீலிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒரு முறையான அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அவர் ஏற்றுக்கொண்டால், சமீபத்திய காலங்களில் இலங்கைக்கு வருகை தரும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான மூன்றாவது உயர் ஸ்தானிகர் ஆவார்.

2013 ஆம் ஆண்டில், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அல் ஹுசைன், பெப்ரவரி 2016 இல் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கைக்கு விஜயம் செய்தார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் முடிவில் முறையான அழைப்பை மைக்கல் பச்லெட்டுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment