31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் அருகி வருகிறது: முன்னாள் எம்பி சந்திரகுமார்

பெண்கள் பாதுகாப்பாகவும், கௌரவமாக வாழ்கின்ற சூழல் அருகிவருகிறது எனவும்,
அண்மைய சம்பவங்கள் செய்திகள் அதனை புலப்படுத்துகிறது என்றும் சமத்துவக்
கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான மு.சந்திரகுமார்
தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (14) சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெற்ற
சர்வதேச மகளீர் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்

வட்டக்கச்சியில் மூன்று குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டு தானும்
தற்கொலைக்கு முயன்ற பெண், அம்பாள்குளத்தில் கர்ப்பிணியான பெண் கொலை
செய்யப்பட்டமை, யாழ்ப்பாணத்தில் தனது பச்சிளம் குழந்தையை தாக்கிய தாய் என
இச் சம்பவங்கள் அனைத்திற்கும் அப் பெண்களை காரணம் அல்ல அவர்களை அந்
நிலைக்கு கொண்டு சென்ற இச் சமூகமே காரணம். இச் சம்பவங்களுக்கு சமூகமாகிய
நாங்களே பொறுப்பேற்க வேண்டும். அதிகரித்து சட்டவிரோத போதைப்பொருள் பாவனை,
சட்டவிரோத மதுபானம், மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளால் பெண்களின்
பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது. அவர்களின் கௌரவம் கேள்விக்குள்ளாகிறது.
எனத் தெரிவித்த அவர்

யுத்தத்திற்கு பின்னர் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், போன்றவர்களின் முன்னேற்றத்திற்கு நாம் என்ன செய்துள்ளோம் என்ற மிகப்பெரிய கேள்வி எம் முன்னே எழுகிறது. எங்கள் சமூகத்தில் வாழ்கின்ற இவர்கள் தொடர்பில் நாம் என்ன ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்ற கேள்வி எழுகிறது. பெண்கள் நிம்மதியாக, கௌரவமாக, பாதுகாப்பாக, வாழ்வதற்குரிய சூழலை இல்லாது செல்வதற்கு இச் சமூகமே பொறுப்பேற்க வேண்டும்.

மக்களின் வாக்குகளை பெற்று அதிகாரத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கூட
இவ்வாறான சமூக கட்டமைப்புக்களை சிதைக்கின்ற விடயங்களில் அக்கறை
செலுத்துவதாகவும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர்

நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக அதிகரித்து
வருகின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுச்
செயற்பாடாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். மாறாக பெண்கள் தினத்தில்
மாத்திரமே பெண்கள் உரிமைகள்,சமத்துவம் பற்றி பேசிவிட்டு கடந்து
செல்கின்றவர்களாக நாம் இருக்க கூடாது, இருக்கவும் முடியாது எனவும்
தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment