மன்னாரில் யுவதிகளுடன் சென்ற பேருந்து கவிழ்ந்தது!

Date:

மன்னாரில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு யுவதிகளை ஏற்றிச்சென்ற பேருந்து மடு பொலிஸ் நிலையம் முன்பு இன்று திங்கட்கிழமை காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லும் பெண்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து மன்னாரில் இருந்து மடுவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது மடுரோட் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நாய் ஒன்று குறுக்கிட சாரதி பேருந்தை வீதியின் அருகாலே செலுத்த முயற்சித்த போது பள்ளத்திற்குள் சென்று குடைசாய்ந்துள்ளது.

குறித்த விபத்தில் அதிஸ்ரவசமாக எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர்,...

அரவிந்த டி சில்வா தம்பதியின் ரூ. 40 மில்லியன் பிணை அரசுடைமை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின்...

வட்டமடு விவசாயிகளுக்கு இன பாகுபாடு- கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வட்டமடு விவசாயிகளின் வாழ்வாதார நிலங்களில் விவசாயம் செய்வதற்குத் திருக்கோவில் பிரதேச செயலாளர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்