Pagetamil
இலங்கை

கிடைக்கும் அதிகாரங்களை வைத்துக் கொண்டு முன்னகருங்கள்: இந்திய தூதர் தமிழர்களிற்கு ஆலோசனை!

மாகாணசபை முறைமையை பலப்படுத்த இந்தியா நடவடிக்கையெடுக்க வேண்டுமென 10 தமிழ் கட்சிகளின் கூட்டு, இந்திய தூதரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

10 தமிழ் கட்சிகள் கூட்டின் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.வி.விக்னேஸ்வரன், பேராசிரியர் க.சிவநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சி சார்பில் என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பொ.ஐங்கரநேசன்,  ஜனநாயக போராளிகள் சார்பில் வேந்தன், கதிர், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் சார்பில் அனந்தி சசிதரன் ஆகியேர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாகாணசபையை வலுப்படுத்துவது பற்றி கோரிக்கை விடுக்கப்பட்டது.

காணி அபகரிப்பு பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது. வேலைவாய்ப்புடன் கூடிய அபிவிருத்தி திட்டம் பற்றியும், இந்திய உயர்கல்வி நிறுவனங்களை வடக்கில் திறப்பது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை மக்களுடன் தொடர்ந்து நாம் இருப்போம். கிடைக்கும் அதிகாரங்களை வைத்துக் கொண்டு படிப்படியாக முன்னகர வேண்டும் என சுருக்கமாக இந்திய தூதர் தெரிவித்திருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

மற்றொரு துப்பாக்கிச்சூட்டு விபரம் அம்பலம்

Pagetamil

கல்முனையில் உருவாகியுள்ள தீவிரவாதக்குழு!

Pagetamil

Leave a Comment