அபேசிங்க எம்.பியை விசாரிக்க நானே உத்தரவிட்டேன்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.

கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித் தொடரின் 14 வது நிகழ்ச்சி இன்று (13) காலி மாவட்டத்தில் உள்ள ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் பசில் ராஜபக்ஷவும், நானும், நிசங்க சேனாதிபதியும் இருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்ததார்.

அந்த எம்.பியை அழைத்து அவரிடமுள்ள தகவல்களை பெற்றுக்கொள்ள சி.ஐ.டியினருக்கு நான் அறிவுறுத்தினேன். ஏனெனில் தகவல்களை மறைப்பது குற்றமாகும்.

இருப்பினும், தகவல்களை கேட்டபோது, ​​எனக்குத் தெரியாது. நான் மறந்துவிட்டேன். இதுபோன்ற தகவல்கள் தனக்குத் தெரியாது என்று கூறுகிறார். இதுதான் அவர்கள் பொதுமக்களிற்கு தெரிவிக்கும் தகவல்கள். இதை நாங்கள் விசாரிக்கவில்லையென்றால், இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் பொதுமக்கள் மத்தியில் பரவியிருக்கும். இதுபோன்ற ஒரு தேசிய பிரச்சனையில் அவர்கள் எந்த விதமாக பொய்களை பரப்புகிறார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். ஒரு எதிர்க்கட்சியாக நிங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும். ஆனால் அவை உண்மையாக இரக்க வேண்டும். மக்களை பிழையாக வழிநடத்த இதுபோன்ற புனைகதைகளை அல்ல“ என்றார்.

spot_imgspot_img

More like this
Related

திலீபன் நினைவேந்தலை தடுப்பது மாண்புக்கு எதிரானது – யாழ். சர்வமத பேரவை

ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின்...

ஏறாவூரில் போதைப்பொருள் ஒழிப்பு குழு மீது பரபரப்பு குற்றச்சாட்டு “அப்பாவி இளைஞர்களை போதைப்பொருளுடன் கைது செய்ய முயற்சி”

ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அனஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருள் ஒழிக்கும்...

பத்மேயின் கையெழுத்தை பரிசோதிக்க உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்