புகையிரத கடவையில் பொறுப்பற்ற விதமான மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்று, மயிரிழையில் புகையிரதத்துடன் மோதாமல் தப்பித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
புகையிரத கடவை மூடப்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் ஒன்று காத்திருந்த போது, மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இரண்டு இளைஞர்கள், தரித்து நின்ற மோட்டார் சைக்கிளை கடந்து செல்ல முயற்சித்தனர். அவர்கள் கடவையை நெருங்க, புகையிரதம் அந்த பகுதியை கடந்தது.
மயிரிழையில் மோட்டார் சைக்கிளை திருப்பி இளைஞர்கள் தப்பித்து கொண்டனர்.
புகையிரத கடவைகள், சமிக்ஞை விளக்குகளில் பொறுப்பற்ற விதமாக வாகனத்தை செலுத்துவதால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1