26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

யாழில் பல்வேறு சந்திப்புக்களில் கலந்து கொண்ட இந்திய தூதர்!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்திற்கான இந்த விஜயத்தின் போது இந்திய பல இடங்களிற்கும் சென்று பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் பின்னர் நல்லை ஆதீனத்திற்கு சென்று ஆதீன குருமுதல்வரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் ஒரு அங்கமாக இந்திய உதவியில் அமைக்கப்படும் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கும் சென்று புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து யாழ் பொது நூலகத்திற்கு சென்று நூலகத்தை பார்வையிட்டதுடன் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இன் நிகழ்வில் யாழ் மாநகர துணை முதல்வர், யாழ் இந்திய துணைதூதர் பாலச்சந்திரன் மாநகரசபை உறுப்பினர்கள் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment