வாங்கிய கடனை இன்று இரவுக்குள் திருப்பி தாருங்கள்: பாகிஸ்தானை நெருக்கும் அமீரகம்!

Date:

தாங்கள் வழங்கிய 1 மில்லியன் டொலர் பணத்தை திரும்ப அளிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு கடனாக சுமார் 1 பில்லியன் டொலர் கடனை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது . இதனை பாகிஸ்தான் தேசிய வங்கியில் டெபாசிட் செய்தது. இந்த நிலையில் இன்று இரவுக்குள் தாங்கள் வழங்கிய கடன் தொகையை திருப்பி அளிக்கும்படி ஐக்கிய அமீரகம் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.

கடன் தொகையை அமீரகம் திருப்பி கேட்டுள்ளதால் பாகிஸ்தான் அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பொருளாதாரம் சரிந்துள்ளது இந்த நிலையில் அமீரகமும் கடனை திரும்ப அளிக்கும்படி கேட்டுள்ளதால் இம்ரான் கான் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரான ஷேக் முகமது பின் சயித்தை சந்திக்க முயற்சி செய்து வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு அமீரகம் ஏன் திடீரென இவ்வளவு நெருக்கடி அளிக்கிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

spot_imgspot_img

More like this
Related

செம்மணிக்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் நீதிக்கோரிய போராட்டம்

ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்  குழுவினர் செம்மணி மனித புதைகுழியை நாளையதினம் பார்வையிடவுள்ள...

கன்னியா பகுதியில் விகாரை அமைக்க திட்டம்; தமிழ் மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதிக்க வேண்டு

திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா...

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்