உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமை, நான்கு மாலத்தீவு நபர்கள் சந்தித்து பேசியதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சஹ்ரான் மற்றும் சிலரை, மாலைதீவு நபர்கள் சந்தித்தார்கள். இந்த சந்திப்புக்கள் இலங்கையிலதான் நடந்தன என தெரிவித்தார்.
இந்த சந்திப்புகள் 2016 ஆம் ஆண்டிற்கும் 2019 ஏப்ரல் தாக்குதலுக்கும் முன்னதாகவும் நடந்ததாகக் கூறினார்.
நான்கு மாலைதீவு நபர்களும் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டுள்ளதாக வீரசேகர கூறினார்.
அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட இரண்டு இலங்கையர்களின் மூலம், சஹ்ரானிற்கும், மாலைதீவு நபர்களிற்குமிடையில் தொடர்பு ஏற்பட்டது என்றார்.
ஹாஷிமுடன் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய இலங்கையை தளமாகக் கொண்ட 11 அமைப்புகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.
அத்துடன், சஹ்ரானிடம பயிற்சி எடுத்த பெண்களில் 15 பேர் கைது செய்யப்பட்டு, உயிரிழந்து விட்டனர். சாரா உள்ளிட்ட இருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்தார்.