உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தெரிவித்த கருத்து தொடர்பில், சிஐடியிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க வாக்குமூலம் வழங்கி வருகிறார்.
கடந்த திங்களன்று (08) ஆஜராகுமாறு சிஐடியினர், அசோக அபேசிங்கக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
அதன்பிறகு, மறுநாள் ஈஜராகுமாறு சிஐடி அழைத்தனர். ஆனால் அவர் மீண்டும் ஆஜராகவில்லை.
சனிக்கிழமை (06) நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில், உரையாற்றிய அசோக அபேசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோட்டாபய ராஜபக்ச, பஷில் ராஜபக்ச ஆகியோர் இருந்ததாக தெரிவித்தார்.
தாக்குதலிற்கான நிதியை நிஷங்க சேனாதிபதி வழங்கியதாக கூறினார்.
இது தொடர்பில் பெரமுன உறுப்பினர்கன் சிஐடியில் முறையிட்டிருந்தனர். பின்னர், நிசங்க சேனாதிபதியும் திங்களன்று பாராளுமன்ற உறுப்பினர் அபேசிங்கே மீது சிஐடியிடம் புகார் அளித்திருந்தார்