ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரில் வைத்தே குறித்த நபர் இன்று கைது செய்யப்பட்டார் என்று மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நெல்லியடியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1