மூதாட்டியின் தாலிக்கொடி மாயம்!

Date:

தனிமையில் வாழும் வயோதிபப் பெண்ணின் சுமார் 42 பவுண் தாலிக் கொடி திருட்டுப் போயுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு நேற்று (09) மாலை இலந்தைக்காடு பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண்ணால் வழங்கப்பட்டுள்ளது.

அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தாலிக்கொடி திருட்டுப் போனமை தொடர்பில் சிலரில் சந்தேகம் உள்ளதாகவும் முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ளார்.

தான் பாதுகாப்பாக வைத்த இடத்தில் தாலிக்கொடி கடந்த வாரம் வரை இருந்ததாகவும் நேற்று காணாமற்போயுள்ளதாகவும் முறைப்பாட்டில் வயோதிபப் பெண் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில்...

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்