26.6 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்பு வீதியை புனரமைக்க கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படும் இரண்டு கிலோமீட்டர் நீளமான வீதியினை புணரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்த போது மாத்தளனில் இருந்து புதுக்குடியிருப்பு ஊடாக அரைவாசி தூரம் காப்பற் வீதியாக செப்பனிடும் பணிகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டானில் இருந்து தார் வீதியாக குறித்த வீதியின் மீதி பணிகள் ஆரம்பித்த போதும் இரண்டு பகுதிகளிலும் இடைநடுவில் இரண்டு கிலோமீட்டர் தூரம் திருத்தப்பட்டாது தவறவிட்ட நிலையில் குறித்த வீதியின் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது.

மழைக்காலங்களில் குறித்த வீதியில் பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுவதோடு ஏனைய காலப்பகுதிகளிலும் குன்றும் குழியுமாக காணப்படும் குறித்த வீதியில் பயணம் செய்யும் அரச ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே குறித்த சுமார் 2 கிலோமீட்டர் நீளமான வீதியை மிக விரைவாக செப்பனிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

கிளிநொச்சியில் கால் வீக்கத்தால் துன்பப்படும் காட்டு யானை

east tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தடங்கல்

east tamil

Leave a Comment