உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் மீதான விசாரணைகளைத் தொடங்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று பொலிசாருக்கு அறிவுறுத்தினார்.
அபு ஹிந்த், லுக்மான் தாலிப், அபு அப்துல்லா, ரிம்சான் மற்றும் சாரா ஜெஸ்மின் தொடர்பில் விசாரணை நடத்த சட்டமா அதிபர் உத்தரவிட்டதாக,சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் ஐந்து சந்தேக நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.



