விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு பார்வையாளர்களிற்கு அனுமதியில்லை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஜப்பானில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

இதில் 47 சதவீதம் பேர் குறைந்த எண்ணிக்கையில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும் 44 சதவீதம் பேர் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கருத்து தெரிவித்ததை அடுத்து வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜப்பான் அரசு மற்றும் ஒலிம்பிக் சங்கம் தெரிவித்து உள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பட்டையை கிளப்பிய பாபர் ஆஸம்: தென்னாபிரிக்காவை சுக்குநூறாக்கியது பாகிஸ்தான்!

Pagetamil

கொல்கத்தாவை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை!

Pagetamil

போலந்துடனான ஆட்டம் சமனிலை: சிக்கலில் ஸ்பெயின்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!