சுருட்டு பற்றிய முதியவர் தீயில் எரிந்து உயிரிழப்பு!

Date:

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தீயில் எரிந்து காயமடைந்திருந்த நிலையில் நேற்று (9) சாவடைந்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி குறித்த முதியவர் சுருட்டினை பற்றியுள்ளார். இதன்போது தவறுதலாக அவரது சாரத்தில் தீப்பற்றியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் சாவடைந்துள்ளார்.

சம்பவத்தில் சங்கரப்பிள்ளை வேதாரணியம் (79) என்ற முதியவரே சாவடைந்துள்ளார். அவர் சிலகாலங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது மரணம் தொடர்பாக வவுனியாநகர திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதன்பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்