இன்றைய வானிலை!

Date:

மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றைய வானிலை குறித்த அறிக்கை-

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குதிசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாககாங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் ஆட்சியாளர் பஷார் அல்-அசாத்திற்கு மரணதண்டனை விதித்தது சிரிய நீதிமன்றம்

சிரியாவின் கிட்டத்தட்ட 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போது இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்காக, முன்னாள்...

யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் போராட்டம்

யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் பிற அரசாங்க...

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாநாடு!

பெண்களின் மேம்பாட்டையும், அரசியல் செயல்முறைகளில் அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்