வாழைச்சேனை பிரதேசசபை அமர்வில் கெட்ட வார்த்தைகள் பேசிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் பீதாம்பரம் சபையை விட்டு வெளியேற்றப்பட்டார்.
வாழைச்சேனை பிரதேசசபையின் 37வது மாதாந்த அமர்வு இன்று (8) இடம்பெற்றது.
இதன்போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த விநாயகர்புரம் வட்டார உறுப்பினரான பீதாம்பரம் என அழைக்கப்படும் சீனித்தம்பி தர்மலிங்கம் கெட்ட கெட்ட வார்த்தைகள் பாவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை திட்டினார்.
அவர் அநாகரிகமாக நடந்து கொள்வதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவரை சபையை விட்டு வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
எனினும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த தவிசாளர் சோபா ரஞ்சித் அதை ஏற்கவில்லை. அவர் பீதாம்பரத்தை காப்பாற்றிக் கொண்டிருந்தார்.
இறுதியில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் கி.சேயோன், அநாகரிகமாக நடந்த உறுப்பினரை வெளியேற்ற வேண்டுமென தீர்மானம் ஒன்றை முன்வைத்தார். எதிர்த்தரப்பிலேயே பெரும்பான்மை உறுப்பினர்கள் இருந்ததால், வேறு வழியின்றி பீதாம்பரத்தை சபை அமர்விலிருந்து தவிசாளர் வெளியேற்றினார்.