27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

முல்லைத்தீவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச மகளிர் தினமான இன்று (08)முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்

அவர்களுடைய தொடர் போராட்டத்திற்கு இன்றுவரை நீதி கிடைக்காத நிலையில் இன்று (08) சர்வதேச மகளிர் தினத்தில் நாம் வீதிகளில் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். ஆனால் இந்த அரசாங்கம் அதற்கான எந்தவித பதிலையும் வழங்கவில்லை என தெரிவித்து மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கே என்கின்ற நீதியான விடயங்கள் கிடைக்கப்பெற வேண்டும் என தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்

இந்த வகையில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் செல்வபுரம் பகுதியில் நிறைவடைய இருக்கின்றது. எனவே தமது நாளைய போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

GovPay ஆரம்பம்

east tamil

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டோர் சேவை நிலையங்களுக்கான கள விஜயம்

east tamil

A9 வீதியில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்

east tamil

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி

Pagetamil

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

Leave a Comment