யாழில் நாளை தீச்சட்டி போராட்டம்!

Date:

இலங்கை அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும்
தீப்பந்த போராட்டம் நாளை (08) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நாளை முற்பகல் 11 மணிக்கு நல்லூர் பின் வீதியில் உள்ள போராட்ட களத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ள இப் பேரணி நாவலர் வீதியில் உள்ள ஐநா அலுவலகம் வரை செல்லவுள்ளது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் பொதுஅமைப்புக்கள் இணைந்து வடக்கு கிழக்கில் சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர், அத்துடன் லண்டனில் உள்ள அம்பிகை செல்வகுமார் மேற்குறித்த கோரிக்கை உட்பட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். மேலும் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 4 வருடங்களை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று மேலும் தமிழரின் உரிமைகளுக்காக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நீதிக்காக போராடும் இனத்தின் கோரிக்கைகளை ஐநா கவனத்தில் எடுத்து செயற்படவேண்டும் என வலியுறித்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டத்தில் மத தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புக்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்