26.3 C
Jaffna
January 2, 2025
Pagetamil
இலங்கை

மேலும் 5 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் இன்று (7) மேலும் 5 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மரணங்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-

பல்லேகலை பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில், கொவிட் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் மார்ச் 02 இல் நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட் நிமோனியா நிலை மற்றும் மூளையில் குருதி வெளியேற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த, 82 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (07) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட நுரையீரல் தொற்று நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரவர்தனஓயா பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (07) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், புற்றுநோய் நிலை மற்றும் கொவிட்-19 தொற்று நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த, 77 வயதான பெண் ஒருவர், தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று நிலை மற்றும் உக்கிர இருதய நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான ஆண் ஒருவர், கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த டிசம்பர் 20ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

குளவி தாக்குததால் வைத்தியசாலையில் பரபரப்பு – 11 பேர் மீது குளவி கொட்டு

east tamil

இந்திய மீனவர்களுக்காக விளக்கமறியல் மேலும் நீடிப்பு

east tamil

பாதுகாப்பு அமைச்சில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய

east tamil

போக்குவரத்து முறைகேடுகள் தடுக்கும் e-Traffic செயலி அறிமுகம்

east tamil

Leave a Comment