அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளைக்கு அமைய தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று (5) பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற குறித்த போராட்டமானது சிலரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றிருந்தது.
இதன்போது பொலிசார் குறித்த இடத்திற்கு வருகை தந்து நீதிமன்ற கட்டளையை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பெற்று கொள்ளுமாறு வற்புறுத்தினர்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரவு பதாதைகளை அகற்றியதுடன் அவ்விடத்தில் இருந்து சென்று விட்டனர்.
அத்துடன் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இடம்பெற்ற பேரணி போது கலந்துகொண்ட மக்கள் குறித்த சுழற்சி உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. விசேடமாக இப்போராட்டத்தில் ஒரு பங்காளராக கலந்து கொண்ட முஸ்லிம் மக்களும் இப்போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இது தவிர குறித்த போராட்டத்தில் அம்பாரை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் உட்பட சில அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கலைந்து இன்று உள்ளனர்.