மேலும் 4 மரணங்கள்!

Date:

கொரோனா தொற்றினால் மேலும் 4 மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 493ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரங்கள்-

அட்டால பிரதேசத்தைச் சேர்ந்த, 39 வயதான ஆண் ஒருவர், கேகாலை மாவட்ட வைத்தியசாலையில், கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், சிறுநீரக சிதைவடைவு மற்றம் கொவிட் நிமோனியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 08 (பொரளை) பிரதேசத்தைச் சேர்ந்த, 67 வயதான ஆண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, உக்கிர நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 10 (மருதானை/ மாளிகாவத்தை) பிரதேசத்தைச் சேர்ந்த, 81 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா நிலை, உயர் இரத்த அழுத்தம், உக்கிர நீரிழிவு மற்றும் இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த, 84 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு, மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (05) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், உக்கிர சிறுநீரக தொற்று, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘திருடினால் சிறைதான்’: ஜேவிபி செயலாளர்!

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது...

இலங்கையை விட்டு எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர் சொக்கமல்லி

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர என்ற சொக்க மல்லி நாட்டை...

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்