கம்பஹாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்ற பின்னர் உயிரிழந்த இரண்டு நபர்களும், வேறு சிக்கல்களாலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, 57 வயதான ஒருவர் திவூலபிட்டி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
மற்றொரு நபரும் இறந்துவிட்டார், மேலும் அவர் தடுப்பூசி பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பஹா சம்பவத்திற்குப் பிறகு பொதுமக்கள் தடுப்பூசி எடுப்பதைத் தவிர்க்கக்கூடாது என்று வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.
தடுப்பூசி பெற வேண்டிய அனைவரும் வாய்ப்பு கிடைக்கும்போது அவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, Cதடுப்பூசி பெற்ற பின்னர் இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தினர்.
டுப்பூசிகளைப் பெற்றவர்கள் பொதுவாக 24-42 மணிநேரங்களுக்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள் என்று வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.
எவ்வாறாயினும், காய்ச்சல் தொடர்ந்தால் அது தடுப்பூசி காரணமாக அல்ல, மாறாக பிற நோய்த்தொற்றுகள் காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.