முல்லைத்தீவு மாவட்டதில் கரைதுறைப்பற்று பிரதேசம், கள்ளப்பாடு தெற்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள கண்ணகியம்மன் மீனவ சங்கத்தின் மீன்பிடி துறையின் ஒரு பகுதியை முறைகேடாக அபகரித்து கரைவலை உரிமையாளருக்கு கொடுக்க முயற்சி செய்த முல்லைத்தீவு கடற்றொழில் பரிசோதகரின் முயற்சியை, முல்லைத்தீவு மாவட்ட சமூக செயற்பாட்டாலரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகருமாகிய அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியனின் தலையீட்டால் மீனவர்கள் தொடர்ந்து தொழில் செய்யும் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (02) கள்ளப்பாடு தெற்கு கண்ணகியம்மன் மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு அவ் மீன்பிடி துறைமுகத்தில் 28.02.2021 க்கு முன்பு அவ் இடத்தில் மீன்பிடிக்கும் அனைவரையும் அங்கிருந்து வெளியேறுமாறும் இவ் இடம் கரைவலை பாடு எனவும் கடிததலைப்பு அற்ற கடற்றொழில் பரிசோதகர், முல்லைத்தீவு நகரம் என குறிப்பிட்டு கையொப்பம் ஒன்று இடப்பட்டு மலசல கூட வாசலிலும், மின்னிணைப்பு கட்டிடத்திலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
02.03.2021 அன்று காலை மீன்பிடி துறைக்கு வருகை தந்த கடற்றொழில் பரிசோதகர் அப்பகுதியில் உள்ள மீனவர்களை அச்சுறுத்தி தான் அறிவிக்கும் வரை கடலில் தொழிலுக்கு போக கூடாது என்று அச்சுறுத்தி உள்ளார். அதேவேளையில் தனது சொந்த தேவைக்காக கடல் உணவுகளை கொள்வனவு செய்ய வந்திருந்த முல்லைத்தீவு மாவட்ட சமூக செயற்பாட்டாலரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகருமாகிய அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன் அதை நேரடியாக அவதானித்துள்ளார்.
அதன்போது அனைத்தையும் அவதானித்த அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன், இது கரைவலை பாடு எனில் அதற்கான ஆவணங்களை வெளிப்படுத்துமாறும் கடலில் தொழில் செய்ய யாரும் போக கூடாது என அச்சுறுத்தி உள்ளீர்கள். இது பிழையான விடயம் எனவும், இவ் இடத்தில் 15 வருடங்களுக்கு மேலாக தொழில் புரிகின்றனர், இதில் அமைந்துள்ள மின்விளக்குகள் கம்பங்கள் அதன் மின்சாரப்படியல் கண்ணகியம்மன் மீனவசங்கத்தின் பெயரிலே உள்ளது, இதில் இருந்து மீனவர்கள் ஏன் வெளியேற வேண்டும்? தொழிலுக்கு போக கூடாது சொல்லுவதுக்கு காரணம் என்ன? தொழிலுக்கு போக கூடாது என்பதை எழுத்து மூலம் தர முடியுமா என கேட்டபோது, எழுத்து மூலம் தரமுடியாது எனவும் தான் சொல்லுவதை கேட்க வேண்டும் எனவும் முல்லைத்தீவு கடற்றொழில் பரிசோதகர் கடுமையாகவும் அச்சுறுத்திய போது அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன் தொடர்ந்தும் காரசாரமான கேள்விகளை தொடர்ந்ததுடன் எழுத்து மூலம் தரமுடியாவிடின் மக்கள் தொடர்ந்து தொழில் செய்வர் முடியுமாயின் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என உரத்த குரலில் மக்களுக்காய் குரல் கொடுக்க கடற்றொழில் பரிசோதகர் அவ் இடத்தில் இருந்து விலகி சென்றுள்ளார்.
அதன் பின் அந்த கிராமத்து மக்கள் ஒன்று கூடி தங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட சமூக செயற்பாட்டாலரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகருமாகிய அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியனுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.
இதன் நடுவில் தனது கடமையை செய்ய விடாது முல்லைத்தீவு மாவட்ட சமூக செயற்பாட்டாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகருமாகிய அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன் தடுக்கிறார் என கடற்றொழில் பரிசோதகர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் போலியான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய முயற்சித்த போது அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
மீண்டும் மாலை அப்பகுதிக்கு வந்த கடற்றொழில் பரிசோதகர் தான் கடற்கரையை அளவீடு செய்ய போவதாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் சமாச தலைவருடன் சேர்ந்து அளவீடு செய்ய முயற்சி செய்த வேளை மீண்டு சர்ச்சை வெடித்தது.
கள்ளப்பாடு தெற்கு கிராமத்தின் கிராம சேவைகருக்கு மக்கள் தகவல் கொடுத்ததின் பிரகாரம் கிராம சேவகரும் அங்கு சமூகம் அளித்திருந்தார். இந்தவேளைமீண்டும் அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன் மக்கள் சார்பாக முழு விடயத்தையும் கிராம சேவகர் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
கடற்கரையை அளவீடு செய்துகொண்டிருந்த இடத்துக்கு சென்ற வேளை அங்கு அளவீடு செய்துகொண்டிருந்த கடற்றொழில் பரிசோதகர், சமாசங்களின் தலைவர் மற்றும் சிலரும் அளவிடுவதை உடன் நிறுத்துமாறும் இதை அளவீடு செய்ய பிரதேச செயலகத்தில் உள்ள கணிப்பிரிவும், நில அளவை திணைக்களமும், நீரியல் திணைக்களமும் சேர்ந்தே அளவிட முடியும் எனவும் அ.ஜெ.பீற்றர் இளஞ்செழியன் சுட்டிக்சுட்டிகாட்டியிருந்தார்.
அத்துடன் கிராம சேவகர், கடற்றொழில் பரிசோதகர், சமாசங்களின் தலைவர் இணைந்து கலந்துரையாடி சட்டத்தின் பிரகாரம் அளவீடு செய்யும் வரை மக்கள் தொடர்ந்து தொழில் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது.
இருப்பினும் கடற்றொழில் பரிசோதகர் நடந்து கொண்ட விதம் மக்களை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அவருடன் தொடர்ந்து பயணிக்க முடியாது எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளதுடன் தாங்கள் பழிவாங்கப்படலாம் எனவும் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.